Showing posts with label உன்னை சொல்லி குற்றமில்லை. Show all posts
Showing posts with label உன்னை சொல்லி குற்றமில்லை. Show all posts

December 17, 2008

உன்னை சொல்லி குற்றமில்லை


உன்னை சொல்லி குற்றமில்லை


இங்கொன்று கேட்டு அங்கொன்று சொல்லும் இவ்வுலகில்-நீ மட்டும்

நான் சொல்ல்வதனைத்தை கேட்டும் யாரிடமும் ஒன்றும் சொல்லாமல்

இருக்கிறாய் .


என் மீது தொட்டு தடவி பிணைந்து இருந்தும் -நான் தொடாமல்

நீ உணர்ச்சி பெறாமல் இருக்கிறாய் .


பசி என்று நீ அழுதும் -நான்

உண்ணும் போது என்னோடு உண்ணாமல் இருக்கிறாய்


என்னை எல்லோரிடமும் பேச வைக்கிறாய் -ஆனால்

நீ மட்டும் என்னிடம் பேசாமல் இருக்கிறாய்.


நாகரிகத்தின் திருமகழே , உன்னை சொல்லி குற்றமில்லை


மனிதன் விஞானம் என்னும் தன்னடக்கத்தை உன்னுள்

புகுத்தி ,தன் கைக்குள் அடக்கி ,உனக்கு "கைபேசி (மொபைல்) என்று

பெயரிட்டான் அல்லவா அவனை சொல்லணும் ......